‘தீபாவளியன்று பட்டாசு வெடிக்க’.. ‘இந்த நேரம் மட்டுமே அனுமதி’.. ‘தமிழக அரசு அறிவிப்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘தீபாவளியன்று பட்டாசு வெடிக்க’.. ‘இந்த நேரம் மட்டுமே அனுமதி’.. ‘தமிழக அரசு அறிவிப்பு’..

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், அந்த நேரத்தை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் மற்றும் தொடர்ச்சியாக நீண்ட நேரம் வெடிக்கக்கூடிய பட்டாசுகளைத் தவிர்க்கவும், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களின் அருகே பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN, DIWALI, CRACKERS, BURSTING, TIME, MORNING, EVENING, SLOT