'அடுத்த 4 நாட்கள்'... 7 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

'அடுத்த 4 நாட்கள்'... 7 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்!

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதிலும், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு, தமிழகத்தில் மழை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வரும் 21, 22-ம் தேதிகளில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், மிக அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையின் தாக்கம், அடுத்து வரும் தினங்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

HEAVY, RAIN, ALERT, TAMILNADU, DISTRICTS