‘முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவமழை’.. ‘11 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை தொடங்கும் என கணிக்கப்பட்டிருந்த வடகிழக்கு பருவமழை ஒரு நாள் முன்பாக இன்றே தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.