'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேருந்தின் படிக்கட்டு அருகில் பயணம் செய்த பெண், பேருந்து வேகமாக திரும்பியபோது, பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!

நாமக்கல் அருகே குமாரபாளையத்தை அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோகிலா. இவர், பெருந்துறை செல்ல அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது இருக்கை கிடைக்காததால், படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கோட்டைமேடு என்ற இடத்தில் மேம்பாலப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் மாற்றுப்பாதையான சர்வீஸ் சாலையில், பேருந்து வேகமாக திரும்பியது. இதில், கம்பியை கெட்டியாகப் பிடித்திருந்தும், நிலைதடுமாறிய கோகிலா பேருந்தில் இருந்து, படிக்கட்டை தாண்டி சாலையில் வெளியே தூக்கி வீசப்பட்டார்.

100 அடி தார்ச்சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சாலையோரத்தில் விழுந்தார். இந்தக் காட்சிகள் அங்குள்ள ஒரு கார் விற்பனை மைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அப்போது அவ்ழியாக வேறு எந்த வாகனமும் வரவில்லை. படுகாயமடைந்த கோகிலாவுக்கு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BUS, ACCIDENT, NAMAKKAL, SALEM