'ராஜினாமாவா?'.. அதிரடிப்படை புகழ் முன்னாள் ஐபிஎஸ் 'விஜயகுமார்' விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழகத்தின் தென் மண்டல ஐஜி.யாக 1995-1996 ஆண்டுக்கிடைப்பட்ட காலகட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அரங்கேறிய ஜாதிக் கலவரங்களை ஒடுக்கியதில் விஜயகுமார் முக்கியமாக அறியப்பட்டவர்.

'ராஜினாமாவா?'.. அதிரடிப்படை புகழ் முன்னாள் ஐபிஎஸ் 'விஜயகுமார்' விளக்கம்!

அதன் பின்னர் தமிழக-கர்நாடக சிறப்புப் படைகளை திணறடித்த வீரப்பன், வட கிழக்கு மாநிலங்களில் நக்சல்பாரிகள் உள்ளிட்டோரின் அத்தியாயங்களை முடிவுக்குக் கொண்டுவந்தவர், அடுத்த சில காலம் முதல் தற்போதுவரை காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அவரது ராஜினாமா குறித்த சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும் அவரே விளக்கம் அளித்துள்ளார்.

IPS, VIJAYKUMAR