Darbar USA

தமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்?... சென்னை வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் பனிப்பொழிவு எவ்வாறு இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்?... சென்னை வானிலை மையம் தகவல்!

வட கிழக்கு பருவ மழை கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த 3 நாட்களாக எந்த இடத்திலும், குறைந்தபட்சம், 1 செ.மீ. அளவு கூட மழை பெய்யவில்லை. சில இடங்களில், சிறு துாறல் மட்டும் விழுந்துள்ளது. இந்நிலையில், வரும் நாட்களை பொறுத்தவரை பகலில் மிதமான வெயிலும், இரவில் பனி மூட்டமும் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கில் இருந்து வீசும் காற்று வலுவிழந்து விட்ட நிலையில், வளி மண்டலத்தில் பனி மூட்டம் அதிகரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. போகிப் பண்டிகையினால் ஏற்படும் புகை 9 மணி வரையில், பனிமூட்டத்துடன் சேர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும்  இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOG, RAIN, CHENNAI