'அதிகரிக்கும் மீன்கள் விலை!'... காரணம் என்ன?... இப்போதைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விரத நாட்களை முன்னிட்டு மீன்கள் விலை குறைந்திருந்த நிலையில், மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

'அதிகரிக்கும் மீன்கள் விலை!'... காரணம் என்ன?... இப்போதைய நிலவரம் என்ன?

அசைவ உணவுகளில் தனித்துவமும், மருத்துவ குணமுடைய மீன்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இதன் காரணமாக, சென்னையில் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, எண்ணூர், புழல் காவாங்கரை, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய மீன் மார்க்கெட்டுகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும்.

ஆனால் விரத நாட்களில் நிறைய மக்கள் அசைவம் சாப்பிடமாட்டார்கள் என்பதால் மீன்கள் விலை குறைந்து காணப்படும். இந்நிலையில் விரத நாட்களை முன்னிட்டு மீன்கள் விலை குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் மீன்கள் விலை வெகுவாக உயர்ந்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமாவாசை தினமாக அமைந்தது. வருகிற ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரத நாளாகும். அதேவேளை கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் 40 நாட்கள் தவக்காலம் நாளை (இன்று) முதல் தொடங்குகிறது. இதனையொட்டி மீன்கள் விலை குறைந்துள்ளது. அந்தவகையில் கிலோவுக்கு ரூ.50 வரை மீன்கள் விலை குறைந்திருக்கிறது.

ஆனாலும் இது தற்காலிக மாற்றம் தான். தற்போது மீன்களின் வரத்து குறைவாகவே இருக்கிறது. எனவே வரும் நாட்களில் மீன்கள் விலை நிச்சயம் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

விலை நிலவரம்

சங்கரா (சிறியது) - ரூ.100, சங்கரா (பெரியது) - ரூ.160 முதல் ரூ.180 வரை, சீலா (சிறியது) - ரூ.100, சீலா (பெரியது) - ரூ.220 முதல் ரூ.240 வரை, வஞ்சீரம் (சிறியது) - ரூ.300, வஞ்சீரம் (பெரியது) - ரூ.500, வவ்வால் - ரூ.350 முதல் ரூ.380 வரை, பாறை - ரூ.200, நகரை - ரூ.80 முதல் ரூ.100 வரை, காரல் - ரூ.120 முதல் ரூ.140 வரை, நெத்திலி (சிறியது) - ரூ.70, நெத்திலி (பெரியது) - ரூ.130, மத்தி - ரூ.80, கவளை - ரூ.80, வாலை - ரூ.140, கிழங்கான் - ரூ.80 முதல் ரூ.100 வரை, நண்டு (சிறியது) - ரூ.70, நண்டு (பெரியது) - ரூ.120, புளூ நண்டு - ரூ.250, வலை மீன் - ரூ.200 முதல் ரூ.230 வரை, கானாங்காத்தான் - ரூ.120, கடமான் (சிறியது) - ரூ.80, கடமான் (பெரியது) - ரூ.120, சுறா - ரூ.120, இறால் - ரூ.150 முதல் ரூ.300 வரை (ரகத்துக்கு ஏற்ப), வளர்ப்பு மீன்களான கட்லா - ரூ.100, ஏரி வவ்வால் (ரூப் சந்த்) - ரூ.100 முதல் ரூ.120 வரை, ரோகு - ரூ.100 முதல் ரூ.120 வரை.

 

CHENNAI, FISH, PRICE