‘அத’ மட்டும் பண்ணியிருந்தா ஜெயிச்சிருக்கலாம் ஆனா... இதயங்களை ‘வென்ற’ பவுலரின் செயல்... ‘வைரலாகும்’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து வீராங்கனை கேதரின் எதிரணி வீராங்கனையை மன்கட் முறையில் ரன்அவுட் செய்யும் வாய்ப்பை பெருந்தன்மையோடு மறுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதியுள்ளன. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்துள்ளது.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி களமிறங்க, கடைசி ஓவரில் அந்த அணிக்கு 7 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்தை போட்டி எட்டியுள்ளது. அப்போது அந்த ஓவரை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் கேதரின் ப்ரண்ட் வீசியுள்ளார். கேதரின் பந்தை வீச வந்தபோது நான் ஸ்டிரைக்கரில் இருந்த சுனே லூஸ் கிரீஸை விட்டுத் தள்ளி நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சுனேவை மன்கட் முறையில் ரன்அவுட் செய்து வெளியேற்றும் வாய்ப்பு கிடைத்தும், அதை பெருந்தன்மையுடன் மறுத்த கேதரின் வெறும் எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு அடுத்த பந்தை வீச சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அடுத்த பந்தை தென்னாப்பிரிக்காவின் முக்னான் டு ப்ரீஸால் சிக்சருக்கு விளாச, இறுதியில் 2 பந்துகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இலக்கை எட்டியுள்ளது. வெற்றி பெற வாய்ப்பிருந்தும், இறுதி ஓவரில் எதிரணி வீராங்கனையை மன்கட் முறையில் ரன்அவுட் செய்யாமல் பெருந்தன்மையாக நடந்தகொண்ட கேதரினின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
With the game on the line, Katherine Brunt could have dismissed Sune Luus at the non-striker's end, but opted not to. Moments later Mignon du Preez blasted a game-defining six.
What do you think? 🤔 pic.twitter.com/oPqeUdo7Hl
— ICC (@ICC) February 23, 2020