‘தமிழகத்தில் முதல் பலி’.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபருக்கு’ சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர், கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் நபராகவும் மாறியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘தமிழகத்தில் முதல் பலி’.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபருக்கு’ சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான 54 வயதைச் சேர்ந்த மதுரை நபருக்கு, கோவிட்-19 எனும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டதோடு, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எவ்வளவோ முயற்சித்தும் சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தமது ட்வீட்டில், இறந்துபோன நோயாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு

சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவர் நீடித்த நீரிழிவு நோய் , நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளி என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

CORONAOUTBREAKININDIA, COVID19, 21DAYSLOCKDOWN, CURFEWININDIA, CORONAUPDATESINDIA