கொரோனாவால் 'டேட்டிங்' ஆப்களில்... அலைமோதும் இளைஞர்கள்... 'அந்த' ஆப்-க்கு தான் மவுசு அதிகமாம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் இளைஞர்கள் பலரும் ஆன்லைன் டேட்டிங் ஆப்களில் நேரம் செலவழிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

கொரோனாவால் 'டேட்டிங்' ஆப்களில்... அலைமோதும் இளைஞர்கள்... 'அந்த' ஆப்-க்கு தான் மவுசு அதிகமாம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்து இருக்கிறார். இதுதவிர தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் 144 தடை அமலில் இருக்கிறது.

இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதையொட்டி பலரும் ஆன்லைனில் நேரம் செலவழிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். குறிப்பாக டேட்டிங் ஆப்களில் இளைஞர்கள் அதிக நேரம் செலவு செய்வதாக கிளீடன்(திருமணத்தை மீறிய உறவுக்கான ஆப்) என்னும் டேட்டிங் ஆப் தெரிவித்து இருக்கிறது. இந்த ஆப்பில் தற்போது அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 70% அதிகரித்து இருக்கிறதாம்.

இந்த ஆப் திருமணம் செய்து கொண்டவர்கள், விவாகரத்தானவர்கள், துணையை விட்டுப் பிரிந்து வாழ்வோர் ஆகியோருக்காக 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண், பெண் என 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் இதில் இணைந்துகொள்ளலாம். இந்தியளவில் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர்,சண்டிகர், லக்னோ, கொச்சி, விசாகப்பட்டினம், நாக்பூர் ஆகிய நகரங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆப்பை அதிகம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.