'ஒரு வேளை சோத்துக்கு வழி இல்ல சாமி...' 'எல்லாம் செஞ்சோம், கடைசியில...' வீட்டை விட்டு துரத்திய மகன்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெற்ற மகன்களால் நடுத்தெருவுக்கு வந்த தாய், தந்தை. நிலங்களை மீட்டு தரக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஒரு வேளை சோத்துக்கு வழி இல்ல சாமி...' 'எல்லாம் செஞ்சோம், கடைசியில...' வீட்டை விட்டு துரத்திய மகன்கள்...!

சுப்ரமணி (83) அவரது மனைவி இந்திராணி (65) வானுார் அடுத்த டி.பரங்கினி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள். 5 பிள்ளைகள் இருந்தாலும் தற்போது இருவரும் யாரும் அற்ற அனாதைகள் போல் வாழ்ந்து வருகின்றனர். 

சுப்ரமணி அவர்கள் இளம் வயதில் விவசாய கூலி தொழில் செய்து தான் தன் எல்லா பிள்ளைகளுக்கு திருமணம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் சொந்த உழைப்பில் அவர்களுக்கென்று சொந்த வீடும், 8 ஏக்கர் நிலம் வாங்கி சேமித்துள்ளார்.

சுப்ரமணியின் மகன்கள் அவர்களுடைய தேவைக்காக ஆளுக்கு 1 ஏக்கர் நிலம் பிரித்து தரும்படி கேட்டுள்ளனர். சுப்ரமணியும் எந்த வித தயக்கமும் இன்றி தன் கடமையை உணர்ந்து நிலங்களை அவர்களுக்கு எழுதி தர பத்திரங்கள் கொண்டு வர சொல்லியுள்ளார்.

படிக்க தெரியாத தன் தந்தையை ஏமாற்ற நினைத்த முருகையன் (40) மற்றும் கோவிந்தராசு (30) கிரய பத்திரத்தில் 8 ஏக்கரையும் அவர்கள் பெயரில் எழுதிக் கொண்டு சுப்ரமணியத்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். தன் மகன்கள் இருவரும் தன்னை ஏமாற்றிய செய்தி சார் பதிவாளர் மூலமே அவருக்கு தெரியவந்ததுள்ளது.

சொத்து தங்களுக்கு கிடைத்து விட்ட பிறகு இரண்டு மகன்களும் பெற்றோரை சரிவர கவனிக்காமலும், அவர்களுக்கு உணவளிக்காமலும் துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் அம்மா, அப்பா இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த சுப்ரமணி மற்றும் அவரது மனைவி இந்திராணியுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளித்து உள்ளார். அம்மனுவில் தன் மகன்கள் தங்களை ஏமாற்றி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். நாங்கள் இருவரும் தற்போது உயிர் வாழ உணவின்றி, தங்க இடமின்றி தவிக்கிறோம் எனவும், தான் எழுதி தந்த சொத்தை ரத்து செய்து, மீண்டும் தனக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

VILUPURAM