'டேய் அந்த சாக்லேட் ரொம்ப காஸ்ட்லிடா... அப்படின்னா தூக்குடா' ' ஆட்டைய போட்டதை பார்த்த காவலர்...' நண்பர்களால் நடந்த விபரீதம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சாக்லேட் திருடிய பயத்தால் உயிரை இழந்த சம்பவம் பெற்றோரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

'டேய் அந்த சாக்லேட் ரொம்ப காஸ்ட்லிடா... அப்படின்னா தூக்குடா' ' ஆட்டைய போட்டதை பார்த்த காவலர்...' நண்பர்களால் நடந்த விபரீதம்...!

ஹைதராபாத்தில் வனஸ்தலிபுரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் சதீஷ்(17). அவரும் அவருடைய நண்பர்கள் இருவரும் எப்பொழுதும் போல் பேசி, சிரித்து விளையாடி கொண்டிருந்தனர். பிறகு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சாக்லேட் வாங்க சென்றுள்ளனர்.

சதிஷ் தான் வைத்திருந்த பணத்திற்கு சாக்லேட் வாங்கி வந்துள்ளார். உடன் இருந்த நண்பர்கள் இன்னொரு விலைமிகுந்த சாக்லேட்டை எடுத்து கொண்டு போலாம் என்று சொல்லவே, சதீஷும் நண்பர்கள் பேச்சை கேட்டு ஒரு சாக்லேட்டை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் போட்டுள்ளார். இச்செயலை சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் காவலர் கவனித்துவந்துள்ளார்.

சதீஷும் அவரது நண்பர்களும் கடையை விட்டு வெளியே வரும் போது காவலர் அவர்களை பிடித்து விசாரித்துள்ளார். உண்மையை ஒப்புக்கொண்ட சதிஷ் தான் திருடிய சாக்லேட்டை வெளியே எடுத்து வீசியுள்ளார். காவலர் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.

உடனே சதீஷின் நண்பர்கள் அங்கிருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். மருத்துவர் சதிஷ் இறந்து விட்டதாக தெரிவிக்க  அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருடிய பயத்தில் அவருக்கு மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்றும் தெரிவித்தனர்.

நண்பர்கள் சொன்னார்கள் என விளையாட்டாக சாக்லேட் திருடிய செயலால் சதீஷ் உயிரிழந்தது அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

CHOCOLATE