580 கிராம் எடையுடன் .. 5 மாதங்கள் 'போராடிய' தேவதை.. உண்மையிலேயே 'ஜான்சிராணி' தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 5 மாதங்கள் போராடி மருத்துவர்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

580 கிராம் எடையுடன் .. 5 மாதங்கள் 'போராடிய' தேவதை.. உண்மையிலேயே 'ஜான்சிராணி' தான்!

நாகை மாவட்டம் சாமந்தப்பேட்டையை சேர்ந்த செல்வமணி-லதா தம்பதியருக்கு கடந்த மே மாதம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. வெறும் 580 கிராம் எடையுடன் குழந்தை பிறந்ததால், அதைக் காப்பாற்ற முடியுமா? என்ற சந்தேகம் பெற்றோருக்கு எழுந்தது.

இதைத்தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனையில் இன்குபேட்டர், செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் 24 மணி நேரமும் அக்குழந்தையை கண்காணித்தனர். 5 மாத போராட்டத்துக்கு பின் அக்குழந்தை 2 கிலோ எடையை எட்டியது. அத்துடன் நன்கு சுவாசிக்கவும் செய்தது. தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் மகிழ்ந்துபோன பெற்றோர்கள் அக்குழந்தைக்கு ஜான்சிராணி என பெயர் சூட்டியுள்ளனர்.

குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு அனைவரும் தங்களது  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

BABY, DOCTOR