எரிபொருள் இல்லை.. நடுவழியில் 'நின்றுபோன' ஆம்புலன்ஸ்.. 'கர்ப்பிணி' பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நடுவழியில் எரிபொருள் தீர்ந்ததால் அப்பெண் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பாஞ்ச் மாவட்டம் பங்கிரிபோசி பகுதியை சேர்ந்தவர் சித்தரஞ்சன் முண்டா. இவரின் மனைவி துளசி முண்டா.கர்ப்பிணியான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் அங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி 39 கிலோமீட்டர் தூரத்தில் பரிபடாவில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நடுவழியில் எரிபொருள் தீர்ந்து போனதால் ஆம்புலன்ஸ் நின்று விட்டது.
தொடர்ந்து வேறு ஆம்புலன்ஸ் வந்து துளசியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது.ஆனால் நடுவழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.