'இறப்பதற்கு' முன் 'வீடியோ காலில்' பேசிய 'டாக்டர்!'.. "அவரோட கடைசி ஆசை இதான்.. நிறைவேத்துங்க முதல்வர் அய்யா!" - கதறி அழும் சைமனின் மனைவி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மருத்துவர் சைமனின் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்வதை சில மக்கள் தடுத்ததால், பலரும் இதற்கு வேதனை தெரிவித்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் மீதே மனிதாபிமானமற்று மக்கள் செயல்பட்டுள்ளதாக சிலர் கண்டனமும் தெரிவித்தனர்.

'இறப்பதற்கு' முன் 'வீடியோ காலில்' பேசிய 'டாக்டர்!'.. "அவரோட கடைசி ஆசை இதான்.. நிறைவேத்துங்க முதல்வர் அய்யா!" - கதறி அழும் சைமனின் மனைவி!!

இந்நிலையில், மருத்துவர் சைமன், இறப்பதற்கு முன் தங்களுடன் பேசிய வீடியோ காலில் அவரது கடைசி கோரிக்கையை முன்வைத்ததாக, அவரது மனைவி ஆனந்தி சைமன் வெளியிட்டுள்ள கோரிக்கை வீடியோ நெஞ்சை உருக்கியுள்ளது.

அதில், “மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள். என் கணவர் டாக்டர் சைமன் கடந்த 19-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய ஃபாதர் அனுமதி கொடுத்தார். ஒரு சில சம்பவங்களால் வேலப்பஞ்சாவடியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டார். அதை நாங்கள் கண்களால் பார்க்கவும் இயலவில்லை.

ஆனால் அவர் இறப்பதற்கு முன் என் பிள்ளைகளுடனும் என்னுடனும் வீடியோ காலில் பேசினாங்க. ஒருவேளை நான் திரும்பி வரலனா, என்னை நம் மரபுப்படி அடக்கம் பண்ணுங்கனு கேட்டுக்கிட்டார்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நல்லமுறையில் கொரோனாவை எதிர்த்து செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அதனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைவான கொரோனா பாதிப்பிலான இறப்பை சந்திக்கிறோம்.

ஆகையால், ஷீல்டு செய்த சவப்பெட்டியில் தான் புதைக்கப்பட்டிருக்கிறார் என் கணவர். அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்தால் யாருக்கும் எந்த தொற்றும் பரவாது. நான் 2 பிள்ளைகளுடன் நிற்கதியாக நிற்கிறேன். நான் கண்ணீருடன் முதலைமைச்சரிடம் வேண்டி கேட்கிறேன் அய்யா. என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேத்துங்கய்யா!” என்று கண்ணீர் மல்கக் கோரியுள்ளார்.

இந்நிலையில் சைமனின் மகன், மகளின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க சைமனின் மனைவி ஆனந்தி சைமனிடம் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.