'புரட்டி' போட்டுள்ள கொரோனாவிலிருந்து 'மெல்ல' எழும் 'நகரம்'... அடுத்தகட்ட அவசர 'நடவடிக்கை' இதுதான்... வெளியாகியுள்ள 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்நியூயார்க்கில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சியில் அம்மாகாண அரசு இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனாவால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துவரும் நாடாக உள்ள அமெரிக்காவில் மற்ற மாகாணங்களைவிட அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நியூயார்க்கில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சியில் அம்மாகாண அரசு இறங்கியுள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 33 கோடியில் நியூயார்க்கில் மட்டும் 1.9 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். முதல்கட்டமாக நேற்று 3,000 பேரிடம் மாதிரிகள் பெற்று ஆய்வுக்காக அனுப்பப்பட்டு கொரோனா பரிசோதனை முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 7,99,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 42,897 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நியூயார்க்கில் மட்டும் இதுவரை 2 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 13,869 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது நியூயார்க்கில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு ஓரளவுக்கு குறையத் தொடங்கியுள்ள நிலையிலும் நோய் பரவல் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.