'பண்டிகை'யை கொண்டாடுங்க... தீபாவளிக்கு.. ஒருநாள் 'எக்ஸ்டிரா' லீவ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  அக்டோபர் 27-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

'பண்டிகை'யை கொண்டாடுங்க... தீபாவளிக்கு.. ஒருநாள் 'எக்ஸ்டிரா' லீவ்!

மேலும் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்றும் முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த மாதத்தில் ஆயுதபூஜை உள்ளிட்ட பல்வேறு விடுமுறை தினங்கள் வருவதால் அதனை ஈடுகட்ட சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பதாக பள்ளிக்கல்வித்துறை கூறியது.

எப்படியும் சனிக்கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என எதிர்பார்த்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. இதனால் தீபாவளிக்குக் கூடுதல் நாட்கள் விடுமுறை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 26ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தற்போது மகிழ்ச்சி நிலவிவருகிறது.

SCHOOLSTUDENT, DIWALI2019