‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அறுவை சிகிச்சைக்கு பின் நடை பயிற்சி மேற்கொள்ளும் ஹர்திக் பாண்டியாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘முதுகுல ஆப்ரேஷன்’.. ‘கஷ்டப்பட்டு நடந்த பாண்ட்யா’.. வைரல் வீடியோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்து நடந்த கிரிக்கெட் தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாண்டாவுக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு நடை பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஹர்திக் பாண்ட்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது உடல்நிலை குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். முன்னதாக அறுவை சிகிச்சை குறித்த புகைப்படம் ஒன்றை ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு இருந்தார்.

HARDIKPANDYA, BCCI, CRICKET, SURGERY, VIRAL