‘உடன்’ அழைத்துச் செல்லாத ‘கணவர்’... ‘திருமணமான’ ஒரு ஆண்டிற்குள் ‘இளம்பெண்’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல்லில் திருமணமான ஒரே ஆண்டிற்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன். ராணுவ வீரரான இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த லட்சுமணன் மீண்டும் காஷ்மீருக்குத் திரும்பியுள்ளார். அப்போது ஈஸ்வரி தன்னையும் உடன் அழைத்துச் செல்லுமாறு எவ்வளவு கேட்டும் அவர் மனைவியை ஊரிலேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்திருந்த ஈஸ்வரி திங்கட்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு லட்சுமணனே காரணம் எனக் கூறி ஈஸ்வரியின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் சமாதானத்திற்குப் பிறகே அவர்கள் அவருடைய உடலை வாங்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.