‘வெடித்து சிதறிய சிலிண்டர்’.. ‘துண்டான சிறுவனின் கை’!.. பஞ்சர் கடையில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பஞ்சர் பட்டறையில் கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து சிதறியதில் சிறுவனின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வெடித்து சிதறிய சிலிண்டர்’.. ‘துண்டான சிறுவனின் கை’!.. பஞ்சர் கடையில் நடந்த பயங்கரம்..!

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் பஞ்சர் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இன்று காலை கண்டெய்னர் லாரிக்கு கம்ப்ரசர் சிலிண்டர் மூலம் காற்று பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் சிலிண்டரின் பாகங்கள் லாரியின் மீதும், அருகில் இருந்த ஓட்டு வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டும் உள்ளே விழுந்துள்ளது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த மௌலீஸ்வரன் என்ற சிறுவனின் கை துண்டாகியுள்ளது. மேலும் சிறுவனின் சகோதரர் ரித்தீஸ், பஞ்சர் பட்டறை ஊழியர் விஷ்ணுகுமார் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்ற போது சாலையில் அதிக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், சிலிண்டரின் பாகங்கள் கண்டெய்னர் லாரியில் மோதி விழுந்ததால் மிகப்பெரிய சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CRIME, SALEM, INJURIED, CYLINDER, BLAST, MECHANICSHOP