‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

HEAVYRAIN, RAIN, ALERT, DISTRICTS, IMD, CHENNAI, TN, LIST