சென்னை: சாலிகிராமம் காவேரி தெரு, சின்மயா நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் உறுதியான கொரோனா பாதிப்புகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை திருமழிசைக்கு மாற்றப்படும் நிலையில், கோயம்பேடு தொடர்புடைய பலருக்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய பலரும் கடலூர், அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தத்தம் சொந்த ஊர்களுக்கு சென்றதை அடுத்து அவர்கள் மூலம் அப்பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமானது. இந்த நிலையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர்கள் சின்மயா நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இதனால் அப்பகுதிகளில் கொரோனா பரவும் அச்சம் நிலவுவதாகவும் தெரிகிறது. இதேபோல் சென்னை வடபழனி அருகே உள்ள சாலிகிராமம் காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.