'நொடிக்கு நொடி பதற்றம்'...'உயர்ந்த பலி எண்ணிக்கை'... 'கவச உடைகளுடன் புகுந்த வீரர்கள்'... வெளியான வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவுக்குச் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்கள் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்கள். மேலும் பலருக்குச் சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 - 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனிடையே எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் ஆர்.கே. மீனா தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த, ரசாயன விபத்து தடுப்பு பிரிவினர் கவச உடைகளை அணிந்து கொண்டு, ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ரசாயன விபத்து தடுப்பு உடைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று மக்கள் யாராவது உள்ளே சிக்கி இருக்கிறார்களா என்று சோதனை செய்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
#VizagGasLeak update 3 @NDRFHQ Spl chemical accident team continues search & evacuation work assisting local people & admin on site @PIBHomeAffairs @ndmaindia @vizagcitypolice @vizagcollector @HMOIndia @BhallaAjay26 pic.twitter.com/yKzxdHu3cV
— ѕαtчα prαdhαnसत्यनारायण प्रधान ସତ୍ଯ ପ୍ରଧାନ-DG NDRF (@satyaprad1) May 7, 2020