“ஏது கொரோனா வைரஸா? எடுறா அந்த நிலவேம்பு கசாயத்த!”.. வழக்கம் போல் கலக்கும் வடிவேலு மீம்ஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவின் அண்டைநாடான சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.

“ஏது கொரோனா வைரஸா? எடுறா அந்த நிலவேம்பு கசாயத்த!”.. வழக்கம் போல் கலக்கும் வடிவேலு மீம்ஸ்!

உலக நாடுகளில் இருந்து சீனாவில் வசிக்கும் பலரும் நாட்டை விட்டு தற்காலிகமாக தத்தம் நாடுகளுக்கு வெளியேறி வரும் சூழலில், சீனாவில் பலரும் இந்த வைரஸால் மடிந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை சீனாவில் இருந்து கேரளா வந்த கேரள மாணவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தீவிர கண்காணிப்பில் அவரை வைத்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டில் நாம் எவ்வளவு பெரிய கொடிய நோய்களையும் தமிழ்நாடு தன் இயல்பான உணவுமுறைகளாலும், பழக்க வழக்கங்களாலும் எதிர்கொண்டதற்கு சார்ஸ் நோய் ஒரு உதாரணம். கிழக்காசிய நாடுகள் முழுவதும் ஒரு காலத்தில் பரவிய சார்ஸ் நோய் நமக்கு தொற்றாமல் இருந்ததற்கு காரணம், ஈரோட்டு மஞ்சளை நாம் நம் உணவில் சேர்த்ததுதான் என்று அப்போது பேசப்பட்டது. அந்த வகையில் அண்மையில் வந்த டெங்குவை நிலவேம்பு கசாயத்தை கொண்டு விரட்டியடித்தோம்.

இதனால்,

‘கொரோனா வைரஸ? எடுறா எடுறா அந்த நிலவேம்பு கசாயத்த!’ என்று தொடங்கி, 

‘கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ் (நிலவேம்பு கசாயம்) எடு’, 

‘உங்க ஊர்லதான் இதுக்கு பேர் கொரோனா வைரஸ். எங்க ஊர்ல இதுக்கு பேரு மர்மக் காய்ச்சல்’

என்று வடிவேலு படங்களைப் போட்டு இணையத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர் நம்ம நெட்டிசன்கள்.

MEME, CORONAVIRUSOUTBREAK