'மாஸ்க்' வாங்க 'கிலோமீட்டர்' கணக்கில் 'காத்துக்கிடக்கும்' பரிதாபம்... அவசர நிலையிலும் 'ஒழுங்கை' விட்டுக் கொடுக்காத 'சீனர்கள்'... 'வைரல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > உலகம்50 பேர் நிற்கும் ரேஷன் கடையிலேயே பொறுமையிழந்து அடித்துக் கொள்ளும் காட்சியை பார்த்து பழகிய நமக்கு, உயிருக்கு ஆபத்தான அவசர நிலையிலும், மாஸ்க் வாங்குவதற்காக கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் காத்திருக்கும் சீனர்களின் வியக்க வைக்கும் ஒழுக்கம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
சீனாவில் அதிதீவிரத்துடன் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியில் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு எவ்வளவு தீவிரமாக நடவடிக்கை எடுத்த போதிலும் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. 7 ஆயிரத்து 711 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதில், ஆயிரத்து 370 நபர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் அறிகுறி இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனிடையே சீனாவில் நோய் தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து வெளியே செல்கின்றனர். பலர் முகத்தில் அணிய மாஸ்க் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மாஸ்க் வாங்குவதற்காக கடைகளில் வரிசையில் காத்துக்கிடக்கும் அவலமும் தொடர்கிறது.
இதனிடையே சீன மக்கள் மாஸ்க் வாங்குவதற்காக மிக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வரிசை கிலோமீட்டர் கணக்கில் நீண்டு கிடக்கிறது. இருப்பினும் சீனர்கள் நெருக்கியடித்துக் கொள்ளாமல், வரிசையின் ஒழுங்கை கடைப்பிடித்த விதம் சமூக வலைதளங்களில் பெரும்பாலானோரின் பாராட்டை பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Long line of people buying masks instead of the state providing them. Want to guess how many infected are in that line without masks? Slow it down and see🧐#WuhanVirus #coronavirus #coronaphobia #coronovirusoutbreak #CoronavirusOutbreak #CoronaVirusCanada pic.twitter.com/gYwdPMQpL6
— Harry Chen PhD (@IsChinar) January 30, 2020