‘எல்கேஜி படிக்கும் மகனுக்கு’... ‘புராஜெக்ட் செய்ய உதவியபோது... 'ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மெழுகுவர்த்தி சாய்ந்து, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘எல்கேஜி படிக்கும் மகனுக்கு’... ‘புராஜெக்ட் செய்ய உதவியபோது... 'ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்'

சென்னையை அடுத்த எண்ணூர் பாரதியார் நகரைச்சேர்ந்தவர் ஜெபா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று இரவு, ஆசிரியை ஜெபா, 4 வயதான எல்கேஜி படிக்கும் தனது மகன் நெல்சனுக்கு, தெர்மாகோல் மூலம் பள்ளி புராஜெக்ட் ஒர்க் செய்ய உதவியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக அந்த மெழுகுவர்த்தி, தெர்மகோலில் சாய்ந்து தீப்பிடித்ததாகத் கூறப்படுகிறது. வேகமாக பரவிய தீ ஆசிரியை புடவையில் பற்றிக் கொண்டது. சப்தம் கேட்டு கீழ்தளத்தில் இருந்து, ஓடி வந்த கணவர் யபேஷ், குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார். ஜெபாவை காப்பாற்றச் செல்வதற்குள் வீடு முழுக்க பரவிய தீயில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். 

ஜெபாவின் சடலத்தை கைப்பற்றிய எண்ணூர் போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லேசான தீக்காயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீ எப்படி பிடித்தது என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, FIRE, CHENNAI