ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்படும்...! முதலமைச்சர் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நவம்பர் 1 -ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாடப்படும்...! முதலமைச்சர் அறிவிப்பு..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அந்த வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1 -ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ எனக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.

கடந்த 1956 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 -தேதி மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரித்த தினத்தை மாநில நாளாக கொண்டாடி வருகின்றன.

மேலும் வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலை கழகங்களில் இயங்கி வரும் தென்னிந்திய மொழிகள் துறையில் ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், ரூ. 36 லட்சம் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.