'இது புதுசால இருக்கு..' வைரலாகும் அஸ்வினின் பெளலிங் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளைப் போல தமிழக அளவில் டிஎன்பிஎல் 20 ஓவர் போட்டிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் நான்காவது சீஸன் போட்டிகள் வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் ட்ராகன்ஸ், காஞ்சி வீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டியில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன் அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. கில்லீஸ் தரப்பில் அலெக்ஸாண்டர் 3 விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிலம்பரசன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடைசி 2 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பந்து வீசிய அஸ்வின் வித்தியாசமாகப் பந்து வீசினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
What even 😂😂😂 pic.twitter.com/cM35bmpVQ2
— Anas Khan (@AnasMagnificent) July 19, 2019