'மகளுக்கு 'ஆண்ட்ராய்ட்' போன்...'ஆசையா வாங்கி கொடுத்த அப்பா'... 'ஃபேஸ்புக் மூலம் நடந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர்கள் அர்ஜூனன் - காளியம்மாள் தம்பதியினர். இவர்களது முதல் குழந்தை 18 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், அந்த குழந்தையின் நினைவாக மரம் நடும் பணியில் இந்த தம்பதியர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பல்வேறு இடங்களில் 4 லட்சம் மரங்கள் வரை நட்டுள்ள இந்த தம்பதியர், ஒரு கட்டத்தில் மரம் நடுவதையே தங்களது முழு நேர பணியாக மாற்றி கொண்டார்கள்.

'மகளுக்கு 'ஆண்ட்ராய்ட்' போன்...'ஆசையா வாங்கி கொடுத்த அப்பா'... 'ஃபேஸ்புக் மூலம் நடந்த விபரீதம்!

இந்நிலையில் அர்ஜூனனின் மனைவியும் அவரோடு இணைந்து மரம் நட ஆரம்பித்த நிலையில், அவரது மகளும் தனது படிப்பை 10ம் வகுப்போடு பாதியிலேயே நிறுத்திவிட்டு மரம் நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது மரங்கள் வளர்ப்பு இயற்கையை பாதுகாப்பது போன்ற  விஷயங்களை தெரிந்து கொள்ள தந்தை அர்ஜூனன் தனது மகளுக்கு புதிதாக ஆண்ட்ராய்ட்  போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து புதிய மொபைல் வந்த மகிழ்ச்சியில் புதிய ஃபேஸ்புக் கணக்கை அந்த சிறுமி ஆரம்பித்துள்ளர். அப்போது ஃபேஸ்புக் மூலம் தென்காசி அடுத்த சொக்கம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர்   பழக்கமாகியுள்ளார். நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறிய ராதாகிருஷ்ணன் சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூர் அழைத்து சென்ற அவர், வாடகை அறை எடுத்து தங்கி ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை சீரழித்துள்ளார்.

இதனிடையே கர்பமடைந்துள்ள அந்த சிறுமி தற்போது காவல்நிலைத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ராதாகிருஷ்ணன் இதுபோன்று வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என தெரிவவில்லை. எனக்கு நடந்தது போன்று வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் மூலம் சிறுமி ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SEXUALABUSE, FACEBOOK, TIRUNELVELI, CHEATED, GIRL