‘அசுர வேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியதில்’.. ‘திடீரென ஹோட்டலுக்குள் புகுந்த லாரி’.. ‘சென்னை அருகே நடந்த கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஹோட்டலுக்குள் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

‘அசுர வேகத்தில் வந்த அரசுப் பேருந்து மோதியதில்’.. ‘திடீரென ஹோட்டலுக்குள் புகுந்த லாரி’.. ‘சென்னை அருகே நடந்த கோர விபத்து’..

நேற்று மாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று இடதுபுறம் வந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி நொடியில் அருகிலிருந்த சாலையோர உணவகம் ஒன்றிற்குள் புகுந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் ஹோட்டல் சுவர் இடிந்து அங்கு வேலை செய்துகொண்டிருந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் மீது விழுந்துள்ளது.

மேலும் அருகில் இருந்த மின்கம்பத்தின்மீதும் லாரி மோதியதில் மின்கம்பி அறுந்து அவர்மீது விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ACCIDENT, CHENNAI, LORRY, HOTEL