'மீன் பிடிக்கும்போது சூழலில் சிக்கிய சிறுவன்' .. 'காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பா'.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணன் மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பாவும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் உள்ள கொட்டகுடி ஆற்றில் 15 வயது சிறுவன் முத்தரசன் நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சிறுவனை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். அப்போது சிறுவனின் சித்தப்பா பரமசிவம் ஆற்றில் இறங்கி தேட ஆரம்பித்துள்ளார்.
ஆற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பரமசிவம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் தேடிக்கொண்டிருக்கும்போதே பரமசிவம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 2 மணிநேர தீவிர தேடுதலுக்கு பின் சிறுவன் முத்தரசனின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். ஆனால் இரவு நேரம் நெருங்கியதால் பரமசிவத்தை மீட்கும் பணியை நிறுத்திய வீரர்கள், காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது பரமசிவம் குதித்த இடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் சடலமாக மீட்கபட்டுள்ளார். அண்ணன் மகனை காப்பாற்ற சென்ற சித்தப்பாவும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.