சென்னையில் இன்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

சென்னை கிழக்கு முகப்பேர் வளையாபதி சாலையை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (26). இன்ஜினீயரிங் படித்துள்ள இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஹரிபிரசாத் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கம்பி ஒன்றில் ஹரிபிரசாத் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட ஹரிபிரசாத் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக வேலைப்பளு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளச்சலில் ஹரிபிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹரிபிரசாத்தின் தந்தை பாலச்சந்திரன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரிலும், வேலைப்பளு காரணமாக தன் மகன் ஹரிபிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.