“ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு!”.. கடிதத்துடன் கிடைத்த குழந்தை... சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 2 மாத பச்சிளம் குழந்தையை சர்ச் வாசலில் பெண் ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு விட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

“ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு!”.. கடிதத்துடன் கிடைத்த குழந்தை... சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்!

ஊரடங்கால் குழந்தையை பராமரிக்க முடியவில்லை என்று கூறி, பெண் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2 மாத ஆண் குழந்தையை சாலையோரம் தவிக்கவிட்டு விட்டு சென்றுள்ள காரியம் சென்னையில் அரங்கேறியது.

அடையாறு பத்மநாபன் நகர் 5வது குறுக்கு தெருவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் இருந்து அழுதுகொண்டிருந்த குழந்தையையும் அதனுடன், “ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வேலை இல்லாம கஷ்டப்படுறேன்... என் பிள்ளையை பார்த்துக்க பணம் இல்லை” என்று குழந்தையின் தாய் எழுதியிருந்த கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர்.

அதன் பின்னர் சிசிடிவியை ஆராய்ந்தபோது பெண் ஒருவர் தன் முகத்தை புடவையால் மூடிக்கொண்டு குழந்தையை விட்டுச் சென்றுள்ளது உறுதியாகியது.  அதன் பின்னர் அம்மா ரோந்து வாகனம் மூலம் குழந்தை அழைத்துச் செல்லப்பட்டு அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.