'தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில்...' 'வௌவால்களுக்கு கொரோனா தொற்று...' 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் பரவி வருவதாக புதிய ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மனிதர்களிடையே வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் வெளவால்களுக்கும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வௌவால்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. இதற்காக சில மாநிலங்களை சேர்ந்த இரண்டு வகையான வெளவால்களின் தொண்டை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வெளவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வௌவால்களின் மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. வெளவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குளின் மூலமாகவோ கொரோனா பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.