சென்னை: ’மாநகரப் பேருந்தில்’ பட்டாக்கத்திகளுடன் 'விரட்டி விரட்டி' மாணவர்கள் 'வெறிச்செயல்'.. அச்சத்தில் 'நடுங்கிய பயணிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல் காரணமாக பட்டாக்கத்தியுடன் ஒருவரை ஒருவர் விரட்டிப் பிடித்து தாக்கிக் கொண்டுள்ள சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி பலரையும் பதறவைத்துள்ளது.

சென்னை: ’மாநகரப் பேருந்தில்’ பட்டாக்கத்திகளுடன் 'விரட்டி விரட்டி' மாணவர்கள் 'வெறிச்செயல்'.. அச்சத்தில் 'நடுங்கிய பயணிகள்'!

கல்லூரி முடிந்து கோயம்பேடு நோக்கி செல்லும் பூவிருந்தவல்லி நகரப் பேருந்தில் பயணித்த இரு தரப்பு மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடி நீண்ட பெரிய பட்டாக்கத்திகளுடன் சென்று பரபரப்பான சாலையில், ஒருவரை ஒருவர் விரட்டிப் பிடித்து பட்டாக்கத்தி கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் எந்த கல்லூரி மாணவர்கள் கெத்து என்கிற விதத்திலும், ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களானால், யார் எந்த ரூட் பேருந்துகளில் செல்ல வேண்டும், இதில் யார்  ‘ரூட்டு தல’யாக இருக்க வேண்டும் என்பன போன்ற காரணங்களாலும் பொது இடத்தில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஒரு சில மாணவர்களை பிடித்து விசாரித்து வருவதோடு, சென்னையின் முக்கிய கல்லூரிகளைச் சேர்ந்த இந்த மாணவர்களைப் பற்றி கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பொதுமக்களிடையே பெருத்த அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

COLLEGESTUDENT, COLLEGESTUDENTS, CHENNAI, VIOLENCE