'தன் பாலின' உறவுக்கு அழைத்து' ...'பாலுறுப்பு அறுப்பு ' ... 'சென்னை'யை அதிரவைத்த 'சைக்கோ '!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன் பாலின உறவுக்கு அழைத்து இரண்டு பேரின் பாலுறுப்பை அறுத்த நபரின், நடமாட்டம் அடங்கிய சிசிடிவி பதிவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.

'தன் பாலின' உறவுக்கு அழைத்து' ...'பாலுறுப்பு அறுப்பு ' ... 'சென்னை'யை அதிரவைத்த 'சைக்கோ '!

சென்னை ரெட்டேரி பகுதியில் பாலத்தின் அடியில் படுத்திருந்த அஸதுல்லா என்பவரது பாலுறுப்பு துண்டிக்கப்பட்டதாக கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் தானே தனது உறுப்பை அறுத்து கொண்டதாக தெரிவித்தார்.சில நாட்களில் சிகிச்சை பலனின்றி இறந்தும் போனார்.இதனிடையே அதே இடத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி நாராயணப் பெருமாள் என்பவரது உறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்  ஒரே இடத்தில்,ஒரே விதமாக நடந்திருக்கும் சம்பவம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து நாராயண பெருமாளிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது. அவர் அளித்த வாக்குமூலத்தில் 'தன் பாலின உறவில் ஈடுபட்டபோது மது போதையில் இருந்த அந்த நபர்,தனது உறுப்பை அறுத்து விட்டதாக' தெரிவித்துள்ளார். இதையடுத்து அஸதுல்லாவிற்கும் இது போன்று தான் நடந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர்.

தொடர்ந்து  நாராயண பெருமாளிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது, நாராயண பெருமாள் கூறிய அடையாளத்துடன்,உறுப்பை அறுத்த சைக்கோ நபர் நடமாடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இதையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.இதனிடையே அந்த சைக்கோ நபர் முனியசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

POLICE, CHENNAI CITY POLICE, RETTERI, PSYCHO KILLER