'இருக்கா இல்லையா? நம்பலாமா நம்பக்கூடாதா?'.. கார் பார்க்கிங்கில் நின்றது ஏலியனா? வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அதென்ன? ஏலியன்கள் அமெரிக்காவில் மட்டும்தான் வந்திறங்குவார்களா? அல்லது அங்குதான் வரவேண்டுமா? என்பன போன்ற பல கேள்விகளும் புதிர்களும் உலக நாடுகள் மத்தியில் நிலவிக்கொண்டிருக்க, இந்த சமயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளன.

'இருக்கா இல்லையா? நம்பலாமா நம்பக்கூடாதா?'.. கார் பார்க்கிங்கில் நின்றது ஏலியனா? வைரல் வீடியோ!

அமெரிக்காவைச் சேர்ந்த  விவியன் கோம்ஸ் என்கிற பெண், தன் வீட்டின் கார் பார்க்கிங் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காரின் அருகே ஏலியன் போன்றதொரு உருவத்தைப் பார்த்துள்ளார். ஆனால் அது உண்மையில் ஏலியன் தானா? என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.

ஆனால் அந்த வீடியோவில் இருந்த உருவம், சினிமாவில் நாம் பார்த்த ஏலியன்களை ஒத்த உருவமாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த 11 மில்லியன் பேரும் ஏலியன்கள் பூமியில் வசிக்கின்றனவா? அல்லது வேற்று கிரகங்களில் இருந்து பூமிக்குள் வந்திருக்கின்றனவா.? உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றனவா? என்பன போன்ற விவாதங்களைத் தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள விவியன் கோம்ஸ், கடந்த ஞாயிறு அன்று காலையில், தன் வீட்டின் கார் பார்க்கிங் அருகே, தூக்கக் கலக்கத்தில் பார்த்தபோது ஏதோ ஒரு உருவம் நிழலென கிராஸ் செய்தது போல் உணர்ந்ததாகவும் அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தால் இத்தகைய உருவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள வீடியோ என்று பலர் சீரியஸாகவும், சிலர் இது ஹாரிபாட்டர் படத்தில் வரும் டாபி கேரக்டர் என்று கிண்டலாகவும் விமர்சித்துள்ளனர்.

ALIEN, VIDEOVIRAL, CCTV