'வீடியோ கால் பண்ணி'...'டிரெஸை கழட்ட சொல்லுவாரு'...'600 பெண்களை ஏமாற்றிய'...'சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றதாக சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப். திருமணமான இவரின் மனைவியும் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பகல் ஷிப்ட்டில் வேலை செய்ய இவர் நைட் ஷிப்ட்டில் வேலை செய்து வந்துள்ளார். இதனால் பகல் நேரத்தில் போலியான வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு பெண் ரிசப்ஷனிஸ்ட் தேவைப்படுவதாக தனது நிறுவனம் மூலமாக பொய்யான விளம்பரம் ஒன்றை செழியன் கொடுத்துள்ளார். இதனை நம்பிய ஏராளமான பெண்கள் அந்த வேலைக்காக செழியனை தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்களிடம் பேசிய செழியன் ''அந்த வேலை
உங்களுக்கு கிடைக்கும், அந்த நிறுவனத்தின் பெண் எச்.ஆர் தங்களிடம் பேசுவார் என நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் இருந்த பெண்களிடம் மீண்டும் தொடர்பு கொண்ட செழியன், நைசாக பேசி மயக்கி, வேலை உறுதியாக கிடைக்கும் நல்ல சம்பளம் என ஆசை வார்த்தைகளை கூறி அந்த பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுள்ளார்.
அதன் பிறகு தனது வேலையை காட்ட ஆரம்பித்த செழியன், வீடியோ கால் மூலம் அந்த பெண்களை தொடர்பு கொண்டு ஆடைகளைக் கழற்றுமாறு மிரட்டியுள்ளார். அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியீடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். அப்போது தான் செழியனின் உண்மை முகம் அந்த பெண்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து செழியனின் மிரட்டலுக்கு அடிபணிந்த அந்த பெண்கள், வீடியோ காலில் தங்களது ஆடைகளைக் கழற்றியுள்ளார்கள். அதனையும் தனது மொபைலில் ரெகார்ட் செய்துள்ளார். இது ஒன்று இரண்டு பெண்களிடம் மட்டுமல்ல,16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்களை இவ்வாறு செழியன் பேசி ஏமாற்றி நிர்வாணப்புகைப்படங்களைப் பெற்றுள்ளார்.
இதனிடையே செழியனிடம் சிக்கிய பெண்களில் 60 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சில பெண்களிடம் மட்டும் தனது வேலையை காட்டியுள்ளார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்களை பெரும்பாலும் அவர் தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கடந்த ஓராண்டாக செழியன் செய்த மோசடி வேலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செழியனிடம் இருந்து 2 செல்போன்களை கைப்பற்றியுள்ள போலீசார், அதனை தற்போது தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். மேலும் அவர் பெண்களை ஏமாற்றி எவ்வளவு பணம் பறித்தார் என்பது குறித்தும் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.