'முன்னாள் மத்திய நிதி அமைச்சர்'... 'அருண் ஜெட்லி' காலமானார்...எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார்.

'முன்னாள் மத்திய நிதி அமைச்சர்'... 'அருண் ஜெட்லி' காலமானார்...எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால்  கடந்த 9-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.

இதனிடையே பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து மருத்துவமனையில் சென்று விசாரித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில்,ஜெட்லியின் உடல்நிலை நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன இந்த  நிலையில்  அவர்  காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது. அவரது மறைவு பாஜக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BJP, NARENDRAMODI, FINANCE MINISTER, ARUN JAITLEY, PASSES AWAY