‘வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில்’.. ‘டீசல் டேங்க் தீப்பிடித்து’.. ‘சகோதரர்களுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியலூர் அருகே  வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

‘வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில்’.. ‘டீசல் டேங்க் தீப்பிடித்து’.. ‘சகோதரர்களுக்கு நடந்த பயங்கரம்’..

பெரம்பலூரைச் சேர்ந்த ஃபையாஸ், ஜமீல் என்ற இரு சகோதரர்களின் தந்தை முஜிபுல்லா வெளிநாட்டில் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தேவையான சில பொருட்களை நண்பர் ஒருவர் மூலம் கொடுத்துவிட ஃபையாஸ் மற்றும் ஜமீல் இருவரும் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி சென்றுள்ளனர். கீழப்பழூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே அரியலூர் நோக்கி வந்துகொண்டிருந்த வேன் ஒன்றின் மீது அவர்களின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் ஃபையாஸ் இரு வாகனங்களுக்கும் இடையே சிக்கிக் கொள்ள, ஜமீல் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அப்போது வேனின் டீசல் டேங்க் சேதமடைந்ததில் உடனடியாக வேன் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் ஃபையாஸ், ஜமீல் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். விபத்தின்போது வேனில் பயணித்த 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். 3 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARIYALUR, VAN, TWOWHEELER, ACCIDENT, DIESELTANK, FIRE, BROTHERS