அவர 'காண்டம்' பயன்படுத்த சொல்லுங்க.. 'சொமாட்டோ'வுக்கு செம அட்வைஸ் கொடுத்த நபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் சாமானிய மக்களும் விஐபி-க்களாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல பெரிய-சிறிய என எந்தவித பாகுபாடும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் நிலையும் உருவாகி வருகிறது.

அவர 'காண்டம்' பயன்படுத்த சொல்லுங்க.. 'சொமாட்டோ'வுக்கு செம அட்வைஸ் கொடுத்த நபர்!

பாராட்டோ, விமர்சனமோ எதுவாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை நேரடியாக மக்கள் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். உணவு,உடை என சகலமும் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யும் வழக்கம் சமுதாயத்தில் வேரூன்றி வருவதால், வாடிக்கையாளர்களின் நிறை-குறைகளை அறிய முன்னணி நிறுவனங்கள் பலவும் சமூக வலைதளங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. 

சில நேரங்களில் சில கருத்துக்கள் காமெடியாகவும் மாறி விடுவதுண்டு. அந்த வகையில் சொமாட்டோ ஊழியர் ஒருவருக்கு வாடிக்கையாளர் அளித்த  அட்வைஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் ஸ்குரில் ஆஃப் ராம் என்னும் பெயரில் இயங்கி வரும் ஒருவர் சமீபத்தில் சொமாட்டோ வழியாக உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவருக்கு உணவு கொண்டு வரும் நபர் குறித்த தகவல்கள் காட்டப்பட்டு உள்ளது. அதில் உணவு கொண்டுவரும் நபருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.தற்போது அவருக்கு 4 மகள்களும், 7 மகன்களும் இருக்கிறார்கள் என்ற தகவல் இருந்தது.

 

இதனைப்பார்த்த ராம் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, ''இவரை காண்டம் பயன்படுத்த சொல்லுங்கள்.இது இவருக்கு நான் தரும் இலவச டிப்ஸ்'',என சொமாட்டோவை டாக் செய்து ட்விட்டரில் பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது.

TWITTER, ZOMATO