‘இதுக்காக முன்னாடியே வார்ன் பண்ணிருக்காங்க’.. ‘மறுபடியும் இப்படியா பண்றது’.. ஷாக் ஆன ஆசிரியர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுபோதையில் ஆசிரியர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செல்வம் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். செல்வத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும்போது குடித்துவிட்டு வரும் வழக்கத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக செல்வத்திற்கு 6 மாத ஊதிய உயர்வை குறைத்து எச்சரிக்கை கடிதத்தை வட்டார கல்வி அலுவலர் கொடுத்துள்ளார். இதற்குபின்னும் பள்ளிக்கு வரும்போது குடித்துவிட்டு வரும் பழக்கத்தை செல்வம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் செல்வம் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த செல்வம் வகுப்பறையிலே மயங்கி விழுந்துள்ளார். இது சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.