‘திடீரென பெயர்ந்த தரைதளம்!’.. ‘நிலை தடுமாறியதால் நேர்ந்த சம்பவம்!’.. ‘செல்லூர் ராஜூ நிகழ்வில் சலசலப்பு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவினர் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘திடீரென பெயர்ந்த தரைதளம்!’.. ‘நிலை தடுமாறியதால் நேர்ந்த சம்பவம்!’.. ‘செல்லூர் ராஜூ நிகழ்வில் சலசலப்பு’!

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தன் கீழ் பல ரவுண்டானாக்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையிலான பல சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில் செல்லூர் ராஜூவின் வீடு அமைந்துள்ள செல்லூர் ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் அமைக்கப்படவிருப்பதால், அந்த ரவுண்டானாவுக்கு சென்று அமைச்சர் செல்லூர் ராஜூ நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

அப்போது மக்களிடம் பேசிய அவர், ‘42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செல்லூரில் இந்த ரவுண்டானா அமைய உள்ளது’ என்று பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் ரவுண்ரானாவின் மீது நின்றுகொண்டிருந்தார்கள். எனினும் சரியான அடித்தளம் இல்லாமல், கழிவுநீர்க் குழாய்க்கு மேலே கட்டப்பட்டதால், கூட்டத்தினரின் பாரம் தாங்காமல் தரைத்தளம் இடிய, உடனே அங்கு நின்ற அதிமுகவினர் சரிந்து விழ நேர்ந்தது.

உடனே பதறிய கூட்டத்தினர் அதிமுகவினருக்கு உதவினர். இந்த சம்பவம் அங்கு நின்ற மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

SELLUR