'போட்டோவை போட்டு கிண்டல்'... 'பிரபல தலைவர் குறித்து அவதூறு'... 'மன்னை சாதிக்' அதிரடி கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாகப் பதிவிட்டதாகக் கூறி மன்னை சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
!['போட்டோவை போட்டு கிண்டல்'... 'பிரபல தலைவர் குறித்து அவதூறு'... 'மன்னை சாதிக்' அதிரடி கைது! 'போட்டோவை போட்டு கிண்டல்'... 'பிரபல தலைவர் குறித்து அவதூறு'... 'மன்னை சாதிக்' அதிரடி கைது!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/actor-mannai-sathik-arrested-by-police-thum.jpg)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சாதிக் பாஷா என்ற மன்னை சாதிக், தமிழ் திரைத்துறையில் துணை நடிகராக இருந்து வருகிறார். பேஸ்புக் மற்றும் Youtube உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான இவர், தனது பக்கத்தில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் படத்துடன் தனது படத்தை இணைத்துக் கிண்டலாகப் பதிவு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ,மன்னார்குடி நகர காவல் துறையினர் மன்னை சாதிக்கை கைது செய்துள்ளனர். அவரை 15 நாட்கள் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.