'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அந்த அலுவலகத்தை இன்போசிஸ் நிறுவனம் உடனடியாக காலி செய்துள்ளது.
உலகின் முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. பெங்களூருவில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில் ‘‘ஐ.ஐ.பி.எம். கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
எனவே அந்த கட்டிடத்தை காலி செய்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை செய்கிறோம்’’ எனக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்ஃபோசிஸ் பெங்களூரு மேம்பாட்டு மையத்தின் தலைவர் குருராஜ் தேஷ்பாண்டே மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு கூறியதாவது, ‘இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பதால், ஐ.ஐ.பி.எம். அலுவலகத்தை காலி செய்துள்ளோம். ஊழியர்களை பாதுக்காக்கும் நோக்கில் அவர்களை வீட்டிலிருந்து பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் ஊழியர்கள் அச்சம் அடைய வேண்டாம். சமூவலைத்தளங்களில் வரும் எந்த கவலை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அவசரக் காலங்களில் நிறுவனத்தின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் மிகவும் பொறுப்புடன் கையாளுகிறோம் என்பதை உறுதிப்படுத்த உங்கள் ஆதரவைக் கோருகிறோம்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, தனது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய இன்ஃபோசிஸ் அறிவுறுத்தியுள்ளது.