‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய துணைக்கண்ட ஜனநாயகத்தின் முக்கிய நாளாக, பொதுத் தேர்தல் நாளான இன்றைய நாள் பார்க்கப்படுகிறது. நடிகர், நடிகையர், புகழ்பெற்றவர்கள் தொடங்கி அனைவருமே ஜனநாயகக் குடிமகனாக, சாமானியனாக தங்களது வாக்களிக்கும் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா?

இந்த நிலையில் நடிகரும், அரசியலாளருமான நடிகர் ரஜினிகாந்த், தனது வாக்கினை இன்று காலை பதிவு செய்துள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச் சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்ய வருகை தந்தார்.

அப்போது ரஜினிகாந்தின் ரசிகர்கள், ‘தலைவா.. தலைவா’ என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். அவர்களைக் கடந்துசென்று நடிகர் ரஜினிகாந்த் வாக்குச்சாவடியில் வாக்கு ஒப்புகைச் சீட்டினை வாங்கிக்கொண்டு, வாக்காளரின் ரகசிய கேபினுக்குள் சென்று வாக்களித்தார்.

ரஜினி மக்கள் மன்றம் தொடங்கி, ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தமது இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான் என்றும், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அல்ல என்றும் முன்னமே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.