'நீ இல்லாத இந்த உலகத்துல...' 'அல்ரெடி முடிவு பண்ணிட்டேன், பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து... ஒரு தலை காதலால் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை அருகே காதலித்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்ததால் மனமுடைந்த இளைஞர், தன் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் உடல்மேல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நீ இல்லாத இந்த உலகத்துல...' 'அல்ரெடி முடிவு பண்ணிட்டேன், பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து... ஒரு தலை காதலால் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர். கிரிக்கெட் வீரர் சேவாக் மீதான அபிமானத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என பெயர் வைத்திருந்தார்.

தெய்வேந்திரன் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்ததால் குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. மூன்று மகன்களும் பத்தாம் வகுப்பு முடித்த கையோடு பல்வேறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். மூன்றாவது மகன் சேவாக்(17) எஸ் ஆலங்குளத்தில் உள்ள டூவீலர் கடையில்  மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண் ஒருவரை சேவாக் காதலித்துள்ளார். இந்த விவரம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து வயதைக் காரணம் காட்டி சேவாக்கை கண்டித்துள்ளனர். ஆனாலும் தனது காதலில் எந்த மாற்றமும் இல்லை என்பதில் சேவாக் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கான நிச்சயதார்த்தமும் நேற்று முன்தினம் நடந்துள்ளது. அங்கு சென்ற சேவாக் சம்பந்தப்பட்ட பெண்ணை சந்தித்து தனது காதல் உண்மை என்றும் உன்னை பிரிந்து என்னால் வாழ முடியாது என்றும், நீ இல்லாத உலகில் இனி வாழப் போவதில்லை என்றும் கூறி அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார்.

குலமங்கலம் வீட்டிலிருந்து இரவு பன்னிரண்டு மணியளவில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே சென்ற சேவாக், காதலியின் பிரிவை எண்ணி தாங்க முடியாமல் முன்பு வாங்கி வைத்திருந்த மதுவை அருந்தியுள்ளார். ஏற்கனவே எடுத்த முடிவின்படி தற்கொலை செய்யலாம் என, தான் ஓட்டி வந்த பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து மதுவுடன் கலந்து குடிப்பதற்காக  கொண்டு வந்த தண்ணீர் கேனில் அதை பிடித்து உடலில் ஊற்றி நெருப்பு பற்ற வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், நள்ளிரவில் பயங்கர அலறல் சத்தத்தோடு ஊருக்குள் ஓடி வந்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள் பாதி எரிந்த நிலையில் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட சேவாக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தான் ஒருதலை காதலால் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

கூலி வேலை செய்து, கஷ்டப்பட்டு வளர்த்த மகன் ஒருதலை காதலில் தற்கொலை செய்துகொண்டதால் அந்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

LOVEFAILURE