WATCH TEASER: ‘காட்டுக்குள் மாஸ் காட்டும் ரஜினி’... ‘ஒளிபரப்பு தேதியை அறிவித்து’... 'டீசரை வெளியிட்ட டிஸ்கவரி சேனல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்ற Man vs Wild நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என்பது குறித்த டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH TEASER: ‘காட்டுக்குள் மாஸ் காட்டும் ரஜினி’... ‘ஒளிபரப்பு தேதியை அறிவித்து’... 'டீசரை வெளியிட்ட டிஸ்கவரி சேனல்'!

டிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி  ஏற்கனவே பங்கேற்றுள்ளார். அந்த வரிசையில் ரஜினியும் கலந்து கொண்டார்.

இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற்றது. பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் பங்கேற்ற இன் டூ தி வைல்ட் (Into The Wild With Bear Grylls) நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் எப்போது ஒளிப்பாரப்பாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வரும் மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை டிஸ்கவரி சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

RAJINIKANTH, RAJINI, PROMO, TEASER, DISCOVERY, CHANNEL