‘பகலில் கார் ஓட்டுநர் வேலை’... ‘இரவில் நண்பர்களுடன் சேர்ந்து’... 'செய்யும் பகீர் காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பகலில் வழக்கறிஞரிடம் கார் ஓட்டுநராகவும், இரவில் இருசக்கர வாகன திருடனாகவும், இரு நண்பர்களுடன் சேர்ந்த செயல்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

‘பகலில் கார் ஓட்டுநர் வேலை’... ‘இரவில் நண்பர்களுடன் சேர்ந்து’... 'செய்யும் பகீர் காரியம்'!

சென்னை ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஜாம் பஜார், திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 15 நாட்களில் அடுத்தடுத்து 8 விலை உயர்ந்த புல்லட், பல்சர் இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போனது. இதையடுத்து ராயப்பேட்டை உதவி ஆனையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். முதலில் புகார் வந்த ஐஸ் ஹவுஸ் ஜானி ஜான்கான் தெரு சிசிடிவி பதிவை ஆய்வு செய்ததில், இரு நபர்கள் திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது.

தொடர்ந்து புகார்கள் வந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வரிசையாக ஆய்வு செய்த போது ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த இருசக்கர வாகன பதிவு எண்ணும் தெளிவாக பதிவாகி இருந்தது. அது மண்ணடியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமானது என்பதையும் கண்டு பிடித்தனர். விசாரணையில் அந்த வழக்கறிஞரிடம் கார் டிரைவராக பணிபுரியும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவர், தனது கூட்டாளி முகமது சபீக் என்பவனுடன் சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் காஜா மொய்தீன் பகலில் கார் ஓட்டுனராகவும் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்று வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் திருடிய வாகனங்களை முகமது சபீக் ஓட்டிச்சென்று தனது நண்பன் முகமது மைதீன் மூலம் கீழைக்கரையில் விற்பனை செய்த 8 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் முகமது மைதீனும் கைது செய்யப்பட்டான்.

THEFT, CHENNAI