Darbar USA

'அடேங்கப்பா இத்தனை லட்சமா'... 'வெறிச்சோடிய சென்னை'... தனியார் நிறுவன ஊழியர்களும் எஸ்கேப்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பொங்கலை ஒட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், இதுவரை 5 லட்சம் மக்கள் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்திருப்பதாக, சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

'அடேங்கப்பா இத்தனை லட்சமா'... 'வெறிச்சோடிய சென்னை'... தனியார் நிறுவன ஊழியர்களும் எஸ்கேப்!

நாளை பொங்கல் பண்டிகை தொடங்கும் நிலையில, வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் ஏராளமான மக்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளார்கள். இதனால் எழும்பூர் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே இன்று போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 15 - தைப் பொங்கல், ஜனவரி 16 - மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 - உழவர் திருநாள் என 4 நாட்கள் தொடர் பண்டிகை காலமாகும். இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. பலர் நேற்று மற்றும் இன்றும் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டார்கள்.

  இதனிடையே தனியார் நிறுவனங்கள் ஒரு நாள் மட்டுமே விடுமுறை அளித்துள்ள நிலையில், பல தனியார் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் தொடர்விடுமுறை எடுத்து கொண்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டார்கள். இதனால் சென்னை வழக்கத்தை விட வெறிசோடி காட்சி அளிக்கிறது. மேலும் மக்களின் நெருக்கத்தை சமாளிக்க, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இன்று வரை இயக்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHENNAI, PONGAL HOLIDAYS, 5 LAKH, SPECIAL BUSES